Breaking
Sat. Jun 21st, 2025

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருவதாக வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாம் அரசாங்கத்தை விட்டு சென்று விடுவோம் என எண்ணி சிலர் பிரதமர் மற்றும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் அணிவதற்கான ஆடைகளைத் தைக்கத் தொடங்கியுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால மீது இடி விழ வேண்டுமென வேண்டியவர்கள் இன்று பிரதமர் மற்றும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ள காத்திருக்கின்றனர்.

தற்போதைய ஜனாதிபதியை அரசியலிலிருந்து ஓரம் கட்ட நினைத்தவர்கள் இன்று பதவிகளை பெற்றுக்கொள்ளும் கனவில் வாழ்கின்றனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தூய்மையான எண்ணங்கள் காணப்படுகின்றன. ஆடம்பரமற்ற முறையில் அரச நிர்வாகத்தை அவர் மேற்கொண்டு வருகின்றார்.

ஜனாதிபதியையும் பிரதமரையும் பிரிக்க எவ்வளவு திட்டங்கள் தீட்டினாலும் அந்த திட்டங்கள் வெற்றியளிக்காது.

நாட்டையும் மக்களையும் கருத்திற் கொண்டே ஜனாதிபதி ஆட்சி செய்வார் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Related Post