Breaking
Sat. Jun 21st, 2025

ஜப்பானில் ஓடுபாதையை தாண்டி தாறுமாறாக விமானம் ஓடியதால் ஏற்ப்பட்ட விபத்தில் அதில் பயணம் செய்த 20 பயணிகள் காயம் அடைந்தனர்.

தென் கொரியாவில் இருந்து ஜப்பானின் ஹிரோசோமா நகருக்கு சென்றது ஆசியானா நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ320 விமானம். விமானம் ஹிரோசோமா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையை தாண்டி விமானம் சென்றதால் பயங்கர விபத்து ஏற்பட்டது. பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் உட்பட அனைவரும் விமானத்தின் அவசர வழி மூலம் வெளியேறினார்கள்.

இந்த விபத்தில் யாறும் உயிர் இழக்கவில்லை. ஆனால் 20 மேற்பட்டவர்கள் காயம் அடைந்ததாக அங்கு உள்ள செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.

Related Post