ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் ராட் அல் ஹீசைன் எதிர்வரும் ஜுன் மாதம் அளவில் இலங்கை வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கை மீதான யுத்தக் குற்றங்கள் குறித்த உள்நாட்டு விசாரணைகள் தாமதிக்கப்பட்டமையே, சர்வதேச தலையீடுகள் அதிகரித்தமைக்கான காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.