ஜெர்மனியில் பொது இடத்தில் சிறுநீர் கழித்தால் முகத்தில் பீய்ச்சியடிக்கும் நவீன சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் உள்ள சுவர்களில் சிலர் சிறுநீர் கழித்து சுற்றுப்புற சூழலை கெடுக்கின்றனர். துர்நாற்றத்தால் அப்பகுதியை பாழடிக்கின்றனர். அவற்றில் இருந்து விமோசனம் பெற ஜெர்மனியில் அதிநவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர்.
அங்குள்ள ஹாம்பிரிக் நகரில் செயிண்ட் பாலி இரவு விடுதி பகுதியில் உள்ள வீடுகளின் சுவர்களில் சிறுநீர் கழித்து நாறடித்து வருகின்றனர். இதை தடுக்க விடுதி நிர்வாகம் தனது கட்டிட சுவர்களில் தண்ணீரை திரும்ப பீய்ச்சியடிக்கும் தன்மை கொண்ட அதிநவீன சூப்பர் பெயிண்டை அடித்துள்ளனர்.
அதன் அருகில், ஒரு எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது. அதில் ‘இங்கு சிறுநீர் கழிக்காதீர். அது மீண்டும் உங்களிடமே திரும்பி வரும்’ என எழுதப்பட்டுள்ளது. இதே பெயிண்டை அந்த விடுதியை சுற்றியுள்ள குடியிருப்புவாசிகளும் தங்கள் சுவர்களில் அடித்துள்ளனர்.
தொழில் நுட்பம் வாய்ந்த இந்த பெயிண்டை அமெரிக்க கம்பெனி கடந்த 2012–ம் ஆண்டு கண்டுபிடித்தது. 3.7 லிட்டர் பெயிண்டின் இலங்கை விலை ரூ. 80,000 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.