Breaking
Thu. Jun 19th, 2025

அஸ்ரப் ஏ சமத்

ஜ.ரீ.என். மற்றும் வசந்தம் தொலைக்காட்சி செய்திகள் கடந்த முன்று மாதத்திற்குள் முதல் தர தொலைக்காட்சி செய்தி சேவை வழங்கும் நிலைக்கு வந்துள்ளது. என ஜ.ரீ.என் செய்திப்பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொது முகாமையாளர் மாவலகே தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் உள்ள சுயாதீன தொலைக்காட்சி மற்றும் வசந்தம் தொலைக்காட்சி பிரதேச செய்தி ஊடகவியலாளர்கள் 300 பேரை அழைத்து நடாத்திய பயிற்சிப் பட்டரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இந் நிகழ்வு கொழும்பு ஹெக்டர் கொப்பேக் கடுவ கேட்போர் நிலையத்தில் நடைபெற்றது.
கடந்த காலங்களில் இ;ந்த தொலைக்காட்சி ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துக்கும் அரச தலைமைத்துவத்துக்கும் ஊது குழலாகவே செயற்பட்டு வந்தது.

ஆனால் கடந்த காலத்தினை விட தற்பொழுது இந்த மைத்திரியின் நல்லாட்சில் – ஜ.ரீ.என் உடனுக்கு உடன் செய்திகள் அறிவிப்பிலும் மக்களது செய்திகள், அவர்களது வாழ்க்கை சம்பவங்கள், எதிர்கட்சி ஆளும் கட்சி அரசியல்வாதிகளையும் கவர்ந்தாகவும் மாறியுள்ளது. இதனை இவ்வாறு முதல் செய்தி நிறுவனமாக எடுத்துச் செல்லும் வாய்ப்பு பிரதேச ஊடகவியலாளர்களது கைகளிலேயே உள்ளது.

தறபொழுது ஜனாதிபதி மற்றும் பிரதமரது செய்தியைக் கூட அது 5வது அல்லது 6வது செய்தியாகவே செல்கின்றது. இந்த நாட்டில் நடைபெறும் அன்றாட மக்களது வாழ்க்கைத்தரம், கொலை களவுகள் சிறுவர் துஸ்பிரயோகம், மக்கள் படும் துண்பங்கள் தாய்மார்களத தமது பிள்ளைகளின் கவலையீனம்,போன்ற பல்வேறு நிகழ்வுகளை நாம் வெளிச்சத்துக்கு கொண்டுவருகின்றோம்.

அதன் முலம் பாதிக்கப்பட்டவர்;களுக்கு தமது செய்தி பார்த்துவிட்டு உடன் தொலைபேசி அழைப்பை எடுத்து அந்த குடும்பத்துக்கு உதவி அளிக்க முன்வருகின்றனர். இதுதான் தமக்கு தேவை. .

ஊடகவியலாளர்கள் எந்த நேரமும் தமது பிரதேசததில தம்மையையே அர்ப்பணிக்க வேண்டும், மழை ,காடு மேடு, பள்ளம், காற்று, வெயில் புழுதி என்று இல்லாமால் எந்த நேரம் தமது பிரதேசத்தில் ஒரு சம்பவம் நடைபெறும் போது அங்கே எமது பிரதேச ஊடகவியலாளர்கள் உடனுக்கு உடன் உரிய காட்சிப்படுத்தி தமது கனனி ஊடக அந்த காட்சிகளை எமக்கு அனுப்பல் வேண்டும். அவ்வாறானாக செயல்படும் சிறந்த பிரதேச ஊடகவியலாளர்களை எமது நிறுவனம் கௌரவிக்கும்.

அரச நிறுவனங்களில் ;அல்லது மக்கள் பிரதிநிதிகள் தமது சொத்துக்களை அல்லது ஏதாவது அநீதிகள் நடக்கும் இடத்து உடனடியாகச் சென்று அதனை காடசிப்படுத்தி அச் செய்திகளை இரண்டு பக்கமும் வாய் மொழி எடுத்தல் வேண்டும் எனக் கூறினார்.

எமது செய்தியில் அரசியல்வாதிகளோ அல்லது தனியாரோ தலையிட நாம் ஒருபோதும் அனுமதியளியோம். அதற்கான பூரண சுதந்திரம் எமக்கு இந்த தலைமைத்துவத்தின் கீழ் கிடைத்துள்ளது. இதுவரை எமது செய்தியைப் ஏன் போடடவில்லை. அல்லது ஏன் பக்கசார்பு என்று யாரும் எமக்கு அச்சுறுத்தவோ கருத்துறை வழங்கவே இல்லை. எமது தொலைக்காட்சிக்கு பூரண சுதந்திரம் எமது நிறுவனத்தின் தலைவர் எமக்கு தந்துள்ளார்.

அப்படி வரும் இடத்து இந்த பொறுப்பிலிருந்து உடன் நான் விலகிவிடுவேன். எனவும் பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் ஜ.ரீ.என் தலைவர் செயற்பாட்டுப்பணிப்பாளர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்களும் ;கலந்து கொண்டனர்.

Related Post