Breaking
Fri. Jun 20th, 2025

முகம்மட் பஹாத்

ஹெனானிகல ஆதிவாசிகளின் மறைந்த தலைவர் ஊறுவரிகே வன்னிலஅத்தோவின் புதல்வர்நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை புதன்கிழமை (11) பிற்பகல் அவரது அமைச்சில் சந்தித்து தமது இனத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் தொழில்வாய்ப்பு பெற்றுத்தருமாறு விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

ஆதிவாசிகளின் குடியிருப்புகள் உள்ள பிரதேசங்களில் அவர்கள் சுத்தமான குடிநீரைப் பெறுவதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ஹக்கீம், வேடுவர் தலைவர் கேட்டுக்கொண்டபடி, ஆதிவாசிகளில் படித்தவர்களுக்கு தமது அமைச்சின் கீழுள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையில் தொழில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ளுமாறு பிரதித்தலைவர் சபீக் ரஜாப்தீன், நிறைவேற்றுப் பணிப்பாளர் மஹிலால் சில்வா ஆகியோர் முன்னிலையில் சபையின் தலைவர் பொறியியலாளர் கே.ஏ.அன்சாரிடம் கூறினார்.

Related Post