1.தலிபான்கள் தீவிரவாதிகள் இல்லை என அமெரிக்கா
சற்று நாட்களுக்கு முன் அறிவித்தது …
2.தற்போது பாதிரியார் ஒருவர் தலிபான்கள் குறித்து நல்லஎண்ணத்தைபதிவு செய்தார் …உடனே சமூகம் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆர்ப்பரித்து செய்திகள் போடுவதை பார்க்கின்றோம் …
கொஞ்ச காலங்களுக்கு முன்னால்:
1.ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இருந்தே பல ஆண்டுகளாக
தலிபான்கள் குறித்து இட்டுகட்டி மேற்கு ஊடகங்கள் தவறான
செய்திகளை வெளியிட்டு கேவலப்படுத்தியது …
2..உலக மக்களும், பெரும்பான்மை முஸ்லிம் சமுதாயமும்
அவர்கள் குறித்து எந்த ஒரு அக்கறையோ பரிதவிப்போ காட்டமால் அவர்கள் பழமைவாதிகள், போர் என்ற போரில் கொல்லும் காட்டு மிராண்டிகள் என்று சொன்ன எழுத்துப் போராளிகள் பலர் …
3..பாகிஸ்தானில் குழந்தைகளை கொன்ற தஹ்ரீக்- எ-தலிபான்
என்ற அமெரிக்க உளவு பிரிவை யார் என்று உண்மை அறியாமல் ஆப்கானிய தலிபான்களாக விளங்கி கொண்டு தீர விசாரிக்காமல் எடுத்த எடுப்பிலேயே தலிபான்களை கயவர்களாக விமர்சித்தனர் ..
4..நீங்கள் யாரை திருப்திபடுத்த ஒழுக்கமான மக்கள் குறித்து
முழுவதும் ஆராயாமல் விமர்சிக்கின்றீர்கள் ?ஒரு முஸ்லிம் குழு போர் என்ற போரில் போராடினால் தீவிரவாதி முத்திரை குத்தும் மேற்கின் மீடியாக்களையா அல்லது அரசாங்கத்தையா ?
சிந்திக்கும் மனங்களுக்கு :
***********************************
1.எங்கே அநியாயம் நடக்கின்றதோ அங்கே நீதிக்கான குழுக்கள்
நீதிக்கான வழிமுறையில் நீதிக்கான பாதையில் போராடுவது நியதி அவர்கள் என்றும் போராட்ட வீரர்களே …அவர்களுக்கு கண்ணியம் தாருங்கள் …
2..அதே வேளையில் நாசக்காரர்களின் முகமூடி களைய களம்சென்று உண்மை அறிந்து உலகில் வெளிக்கொணருங்கள்.
அதுவரை மௌனம் சாதியுங்கள் ..
3..ஒரு இறைநம்பிக்கையாளன் ஒரு போதும் அசத்தியத்தின்
வழியில் அநீதியின் கொடியை பிடிக்கமாட்டான் …
4..ஒரு குழுவை நல்லவர்கள் என்று சொல்ல நிருபணம் தேவை இல்லை.ஆனால் தீயவர் என்று சொல்ல முழுமையான ஆதாரங்களும் வரலாறுகளும் தேவைப்படுகின்றது ..
5..ஆனால் இன்று அதிகாரம் யார் கைகளில் இருக்கின்றதோ
அவர்கள் நியாமான போராளிகளை பயங்கர வாதிகளாக மாற்றுகின்றார்கள் ..
6.இந்தியா நேற்று சிமி யை தடை செய்தது ..இன்று எகிப்து நாடு ஹமாஸை தீவிரவாத அமைப்பாக அறிவித்தது. இக்ஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தையும் முடக்கியது
7..பல நாடுகளில் இஸ்லாமிய போராட்ட வீரர்களின் உண்மை
உலகிற்கு சொல்லாமலேயே பயங்கர வாதிகளாக மாற்றியது ..
8..அவர்கள் செய்த தடையை விட மிகக் கொடுமை
போராட்ட வீரர்களின் சுய உண்மை அறியாமல் போரின் மீதுள்ள வெறுப்பால், உலக ஆசையால்
9.போராட்ட வீரர்களை முந்தி அடித்துக்கொண்டு அவர்கள் தீவிரவாதிகள் என நீங்கள் பறை சாற்றுவது அப்பட்டாமான சமூக அநீதமாக என் அறிவுக்கு புலனாகின்றது …