தலைமன்னார் கோர விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கு இறுதி மரியாதை செலுத்திய மக்கள் காங்கிரஸ் தலைவர்!

தலைமன்னார், பியரில் நேற்று (16) இடம்பெற்ற ரயில் – பஸ் கோர விபத்தில் உயிரிழந்த 13 வயது மாணவன் பாலசந்திரன் தருணுக்கு இறுதி மரியாதை செலுத்திய மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்து, வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் விரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.