கடந்த 25 வருடங்களுக்குப் பின்னர் தலைமன்னார் முதல் கொழும்புக்கான புகையிரத சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்ட்டது.இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த சேவையினை தலைமைன்னார் துறையிலிருந்து உத்தியோக பூர்வமான ஆரம்பித்து வைத்தார்.
கடந்த ஆண்டு இந்திய வெளிவிகார அமைச்சர் மதவாச்சி தொடக்கம் மடு வரைக்குமான புகையிரத சேவையினை ஆரம்பித்து வைத்தார்.இரண்டாம் கட்டமாக மடு முதல் தலை மன்னார் வரை புகையிரதப்பாதை செப்பனிடப்பட்டதுடன்.இந்திய பிரதமரினால் இந்த சேவையும் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த புகையிர பாதை அமைப்புக்கென 2500 கோடி ரூபாய்களை இந்திய அரசு இலங்கைக்கு வழங்கியிருந்தது.இன்றைய இந்த ஆரம்ப நிகழ்வில் பிரதமர் மோடியு்டன்,அமைச்சர்களான ரன்ஜித் மத்துமபண்டார,றிசாத் பதியுதீன்,பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக்,பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கல நாதன்,ஹூனைஸ் பாருக்,முத்தலிபாவா பாருக்,வட மாகாண சபை அமைச்சர் டெனீஸ்வரன்,மாகாண சபை உறுப்பினர்களான றிப்கான் பதியுதீன்,அஸ்மின் அய்யூப் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.