Breaking
Wed. Jun 18th, 2025

சர்வதேச தொழில் பயிற்சி நிறுவகத்தில் (International vocational academy) தாதியர் பயிற்சிகளை நிறைவு செய்து கொண்ட வடமாகாணத்தை சேர்ந்த 75 யுவதிகளுக்கான தாதியர் அங்கீகாரத்தை வழங்கும் நிகழ்வு இன்று வவுனியா வைரவபுளியங்குளம் முத்தையா கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.

சர்வதேச தொழில் பயிற்சி நிறுவகத்தின் தலைவர் லயண் சித்தீக் நதீர் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்த கொண்டு பயிற்சியினை நிறைவு செய்து கொண்ட தாதியர்களுககான நினைவு கேடயங்களை வழங்கி வைத்தார்.

இங்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் உரையாற்றுகையில் –
இந்த நிறுவகம் மேற்கொண்டுள்ள பணியானது பாராட்டுக்குரியது. இதனது தலைவர் நதீர் அவர்கள் இப்படியான ஒரு கல்லுாரியினை நடத்திவருவது பாராட்டுக்குரியது.
குறிப்பாக இந்த பயிற்சியினை நிறைவு செய்து கொண்டவர்களுக்கு வைத்தியசாலைகளில் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். அதேவேளை, அண்மையில் என்னை சந்தித்த ஜேர்மன் நாட்டின் துாதுவர், அந்த நாட்டில் தாதியர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் தொடர்பில் எடுத்துரைத்தார்.

இவ்வாறு சிறந்த பயிற்சிகளை பெற்றவர்களுக்கு அவ்வாறான வேலைவாய்ப்புக்கள் இருக்கின்றது. இது தொடர்பில் சர்வதேச தொழில் பயிற்சி நிறுவகத்தின் தலைவரின் கவனத்திற்கு கொண்டுவரவிரும்புகின்றேன். என்றும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் இங்கு கூறினார்.

1509822_1047883855227809_8358770955517933633_n 11069431_1047883841894477_5748118973066088009_n 11081238_1047883828561145_403021189769880399_n

Related Post