கடந்த அரசாங்கத்தின் தாமரைக் கோபுரத் திட்டம் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இலங்கை போன்றதொரு நாட்டில் தாமரைக் கோபுரம் போன்றதொரு பாரியளவு திட்டமொன்று அவசியமற்றது என துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்புத் துறைமுகத் திட்டத்தை பார்வையிடச் சென்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாமரைக் கோபுரத் திட்டம் குறித்து ஜனாதிபதியிடம் பேச உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் பெஹலியகொடவில் அமைக்கப்படவிருந்த போதிலும் கடந்த அரசாங்கம் குறித்த கோபுரத்தை துறைமுக நகரில் அமைக்கத் தீர்மானித்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கோபுரத்தை அமைப்பதற்கு 104 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.