Breaking
Mon. Jan 20th, 2025

எதிர்வரும் பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் எமது கட்சி இரண்டு ஆசனங்களை கைப்பற்றும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் மூன்றாம் இலக்கத்தில் போட்டியிடும் முன்னாள் அரச நிருவாக சேவை உத்தியோகத்தரும், வேட்பாளருமான ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேசத்தில், அவரது கட்சி காரியாலயத்தை திறந்து வைத்து (21) மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் தனது உரையில் திகாமடுல்ல மாவட்டத்தில் இம்முறை பல புது முகங்கள் களமிறங்கியிருப்பதால் போட்டித் தன்மையை காணப்படுகிறது. மக்கள் புது முகங்களை விரும்புவதால் இவர்களுக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

எமது கட்சி நாடளாவிய ரீதியில் போட்டியிடுகின்றன அதிகமான ஆசனங்களை கைப்பற்றும் அதற்குரிய மக்கள் செல்வாக்கும் ஆதரவும் காணப்படுகிறது. இதன் மூலம் அம்பாறை மாவட்டத்தில் காணப்படுகின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் பொதுவாக பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் போன்ற குறை நிறைகளை கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

இதற்காக மாவட்ட மக்கள் பூரண ஆதரவைத் தந்து எமது கட்சிக்கு வாக்களிப்பதோடு எனது இலக்கம் மூன்றுக்கும் வாக்களித்து என்னையும் புதிய ஆட்சியில் அமையப் போகின்ற பாராளுமன்றத்துக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினராக அனுப்புவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குயுண்டு என மேலும் தெரிவித்தார்.

எம். எப். றிபாஸ்

Related Post