முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் இன்று வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
சட்டத்தரணிகள் இருவருடன் சென்ற அவரிடம் சுமார் ஆறு மணித்தியாலயங்கள் விசாரணைகள் இடம்பெற்றன.
பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் பலவற்றிலிருந்து ஹெரோயின் போதைப்பொருட்களை கடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலே சுதாவினால் வழங்கப்பட்டுள்ள வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.