Breaking
Sun. Jun 15th, 2025

பாகிஸ்தானில் பெஷாவர் பள்ளிக்கூட தாக்குதலுக்கு பின்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மரண தண்டனை மீதான தடை ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து தொடர்ந்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை உச்சகட்டமாக ஒரே நாளில் 12 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஜெர்மனி மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் உலக நாடுகளில் தூக்கு தண்டனை நிறைவேற்றக்கூடாது என்று வலியுறுத்தி வருகின்றன. பாகிஸ்தானில் தொடர்ந்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதை கருத்தில் கொண்ட ஜெர்மனி, அந்நாட்டிற்கான பாகிஸ்தான் தூதரை அழைத்து தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்குமாறு சம்மன் கொடுத்து உள்ளது.

இதுகுறித்து ஜெர்மனி நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி கூறுகையில், ‘பாகிஸ்தானில் நிறைவேற்றப்பட்டு வரும் தூக்கு தண்டனையை ஜெர்மனி உன்னிப்பாக கவனித்து வருகிறது. தூக்கு தண்டனை மனித இனத்திற்கு எதிரானது. மிகக்கொடூரமான தண்டனை. உலக நாடுகளில் இருந்தே இந்த தண்டனையை ரத்து செய்ய ஜெர்மனி போராடி வருகிறது’ என்று தெரிவித்தார்.

Related Post