Breaking
Fri. Jun 20th, 2025

அஷ்ரப் ஏ சமத்

தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவராக கண்டி யஹலத்தென்னை பிரதேசத்தை சேர்ந்த ஜனாப் ஹிதாயத் சத்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.பெருந்தோட்டதுறை  அமைச்சர் லக்மன் கிரியல்ல அவர்களால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மத்திய மாகாண சபை தேர்தலில் 15400 விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்ட இவர் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் மாகாண சபைக்கு தெரிவாகவில்லை.
சந்தைப்படுத்தல் துறையில் தேர்ச்சி பெற்ற பட்டதாரியான இவர் ஐக்கிய தேசிய கட்சியின்  கண்டி மாவட்ட முஸ்லிம் அமைப்பாளர்,கண்டி மாவட்ட முகாமையாளர்,அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல அவர்களின் பிரத்தியேக செயலாளர் ஆகிய பதவிகளை வகித்துவரும் அதேவேளை தற்போது அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் தலைவர்களுள் ஹிதாயத் சத்த்தார் அவர்களே வயதில் குறைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் முஸ்லிம்களுக்காக குரல்கொடுத்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல அவர்களின் அமைச்சில்   முஸ்லிம்களில் ஒருவர்  தென்னை பயிர்செய்கை சபை தலைவராக   நியமிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

Related Post