Breaking
Thu. Jun 19th, 2025

எம்.எம் மின்ஹாஜ்

நாட்டில் நல்­லாட்சி நில­வு­வ­தனால் தேசிய கீதத்தை சிங்­கள மொழியில் பாட­வேண்­டி­ய­தில்லை. தமிழ், அரபு மற்றும் ஆங்­கில மொழி­களில் மாத்­திரம் இசைத்தால் போது­மா­னது.

இவ்­வாறு சென்றால் தேசிய கொடியில் சிங்­கத்தை அகற்­று­மாறும் கோருவர். இதற்கு எதிர்ப்பு வெளி­யிட்டால் எம்மை இன­வா­திகள் என்­பார்கள் என பொது பல சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.

உலகில் எங்கும் இல்­லாத நல்­லாட்சி இலங்­கையில் நிகழ்­கின்­றமை நகைப்­புக்­கு­ரி­யது. இந்த நல்­லாட்­சியில் சிறுப்­பான்­மை­யி­ன­ருக்கே முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டு­வ­தா­கவும் அவர் சாடினார்.

கிரு­லப்­பனை பொது பல சேனா அமைப்பின் காரி­யா­ல­யத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் அங்கு கருத்துத் தெரி­விக்­கையில், தற்­போது தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைக்­கப்­ப­ட­வேண்டும் என கோரப்­ப­டு­கி­றது. தற்­போது நாட்டில் நல்­லாட்­சியே காணப்­ப­டு­கி­றது.

அதனால் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் மாத்­திரம் இசைத்தால் போது­மா­னது. சிங்­க­ளத்தில் பாட வேண்­டிய தேவை ­கி­டை­யாது.

நல்­லாட்­சியில் நாட்டின் பெரும்­பான்மை இனத்­த­வர்­க­ளான சிங்­க­ள­வர்­க­ளுக்கு முன்­ னு­ரிமை அளிக்­கப்­ப­டு­வ­தில்லை. ஆகவே தற்­போது சிங்­கள மொழிக்கு உரிய வகையில் முன்­னு­ரிமை அளிக்­கப்­படு­வ­தில்லை.

ஆங்­கில மொழிக்கே முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­ப­டு­கி­றது. ஆகையால் தேசிய கீதம் தொடர்­பி­லான சர்ச்சை குறித்து ஆச்­ச­ரி­யப்­படத் தேவை­யில்லை.

தற்­போது தேசிய மொழியில் பாடக் கோரும் போது அடுத்த தரப்­பினர் அரபு மொழி­யிலும் தேசிய கீதம் இசைக்­கப்­பட வேண்டும் என கோரு­வார்கள்.
இந்­நி­லையில் தேசிய கீதத்தை சிங்­கள மொழியில் இசைக்க வேண்­டி­ய­தில்லை.

தமிழ், அரபு மற்றும் ஆங்­கில மொழியில் மாத்­திரம் இசைத்தால் போது­மா­னது.

மேலும் நல்­லாட்சி இவ்­வாறே பய­ணித்தால் தேசிய கொடியில் உள்ள சிங்­கத்தை அகற்­று­மாறும் கோரு­வார்கள். இதற்கு எதிர்ப்பு தெரி­வித்தால் எம்மை இனவாதிகள் என்று கூறுவார்கள்.

உலகில் எங்கும் இல்லாத நல்லாட்சியே இங்கு நிலவுகிறது. இந்தியாவில் கூட ஒரு மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படுகிறது என்றார்.

Related Post