Breaking
Thu. Mar 20th, 2025

உணவு விஷமானதால் 12 பேர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்கவிலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு இன்று வழங்கப்பட்ட உணவே  விஷமானதாக காணப்பட்டது

தொடர்ந்து உணவு விஷமாகும் சம்பவம் தொடர்பில், அந்த தொழிற்சாலையின் ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்துவதற்கு தயாராகிகொண்டிருந்த போது காலவரையரையின்றி தொழிற்சாலை மூடப்பட்டுவிட்டதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை உணவு விஷமானதில் இந்த தொழிற்சாலையில் கடமையாற்றிய தங்காலையை சேர்ந்த பெண்ணொருவர் மரணமடைந்தார்.

அவருக்கு நட்டஈடு வழங்குமாறும் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை வழங்குமாறும் ஊழியர்களுக்கு சுத்தமான சாப்பாடு வழங்குமாறு கோரியே இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படவிருந்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

Related Post