-இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ்-
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கை வந்து தலைமன்னார் கொழும்புக்கான புகையிரத சேவையினை ஆரம்பித்து வைத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தமது நன்றிகளை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –
இலங்கைக்கும்- இந்தியாவுக்கும் இடையில் காணப்படும் உறவு தொடர்பில் புதிதாக எவரும் கூறவேண்டிய தேவையில்லை.இது நீண்டகால அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் பின்னிப் பிணைந்ததொன்று என்பதை இங்கு கூறிக் கொள்ளவிரும்புகின்றேன்.
இலங்கையின்அரசியல் வரலாற்று பின்னணியுடன் தொடர்புபடுத்தி நோக்குகின்ற போது இந்தியா இலங்கை;கு மிகவும் நெருக்மான நாடு என்பதை புறந்தள்ள முடியாது.
இந்த வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகை இலங்கையில் புதிய அபிவிருத்திகளுக்கும்,ஏனைய உதவிகளுக்கும் வழி அமைத்துள்ளது.
இந்திய பிரதமர் மோடி அவர்கள் தலைமன்னாருக்கு வந்து புகையிரத சேவையினை ஆரம்பித்து வைத்து அங்கிருந்த அரசியல் தலைமைகளுடன் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பில் எமது நன்றியினை தெரிவிப்பது பொருத்தமாகும்.இந்திய அரசாங்கம் முன்னெடுத்துள்ள வீடமைப்பு திட்டத்தினை இரண்டாம் கட்டமாக மேலும் அதிகரப்பதற்கு நடவடிக்கையெடுப்பதாக தெரிவித்த செய்தி இந்த நாட்டில் குறிப்பாக வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சகல சமூகங்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதமாகும்.
இதுபோன்று தலைமன்னார்-ராமேஷ்வரம் பயணிகள் கப்பல் சேவை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய உட்கட்டமைப்புக்கான ஆரம்ப கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.இந்;திய பிரதமரின் இந்த ஆக்க பூர்வமென செயற்பாடுகள் இந்த நாட்டில் குறிப்பக வடக்கில் வாழும்,தமிழ், முஸ்லிம் சிங்கள மக்களுக்கு பெரும் நன்மை பயக்கும் ஒன்றாகவும்,மன்னார் பொருளாதார கேந்திர முக்கியத்துவமிக்க ஒரு தளமாக மாறுகின்ற நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்பதையும் இந்த வேளையில் நினைவு படுத்திக்கொள்ள விரும்புகின்றேன்.
இந்த நிலையில் இந்தியா இலங்கை;கு வழங்;கும் நலன் திட்டங்கள் தொடர்பில் வன்னி மாவட்ட மக்களது பிரதி நிதி என்ற வகையில் எமது நன்றிகளை இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும்,இலங்கை இந்திய உயர் ஸ்தானிகர்களுக்கும் வடக்கு மாகாண மக்கள் சார்பில் தெரிவித்துக்கொள்வதாகவும் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.