இன்று பிற்பகல் 1.00 மணியளவில் நாடாளுமன்றம் கூடவுள்ளது. நாடாளுமன்றின் முன் வரிசை ஆசனங்களில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொண்ட எஸ்.பி. திஸாநயாக்க, ஏ.எச்.எம். பௌசீ, கலாநிதி சரத் அமுனுகம போன்றவர்கள் ஆளும் கட்சியின் முன்வரிசையில் அமர்ந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
முன்வரிசையில் அமர்ந்திருந்த மூன்று ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் பின் வரிசைக்கு செல்ல நேரிடும்.
புதிய அமைச்சரவை மாற்றத்தின் அடிப்படையில் ஏற்கனவே அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர் பதவிகளை வகித்த பலருக்கு பின் வரிசைக்கு செல்ல நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.