இர்ஷாத் றஹ்மத்துல்லா
தேசியத்தில் ஒரு மாற்றத்தை செய்து காட்டியவர்கள் முஸ்லிம்கள்.மஹிந்த ராஜபக்ஷ என்கின்றவர் இந்த நாட்டில் நீ்ண்ட நாட்களாக ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைத்த போது இந்த நாட்டு மக்கள் அந்த மனிதரை மாற்ற வேண்டும் என்று நினைத்த போது அதற்கு முதன் முதலில் முஸ்லிம்கள் ரீதியில் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கியவர் எமது கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் என்பது தான் உண்மை என்கின்றார் சமூர்த்தி,வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி.
குருநாகலயில் இடம் பெற்ற கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள தையல் பயிற்சி நெறிகளின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த நாட்டில் சமூகத்தின் உரிமைக்காக பேசுகின்ற ஒரு துணிகரமான தலைமையாக றிசாத் பதியுதீனை இன்று இந்த நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்டுள்ளனர்.இந்த குருநாகல் மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் தமிழ் பேசும் வாக்காளர்களை வைத்துக்கொண்டு நாம் ஒரு எமக்கான பாராளுமன்றப் பிரதி நிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போனது தொடர்பில் நாம் மீள்பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.
கடந்த காலங்களில் இங்கு அரசியல் செய்ய வந்தவர்களால் நீங்கள் எமாற்றப்பட்டுள்ளீர்கள் என்பதையும் நாம் அறியாமல் இல்லை.முஸ்லிம்களுக்கு என்று ஆரம்பமான கட்சி அது வெறும் ஸலாத்தை கூறுகின்ற போது அதற்கு பதிலை மட்டும் சொல்லும் ஒன்றாக இருந்து வந்துள்ளதை நாம் பார்க்கின்றோம்.பெருநாள் வந்துவிட்டால் எமது கிராம வீதிகளில் வருகின்ற புடவைக்கட்டு வியாபாரிகளை அறிவீர்கள்,அவரிடம் வாங்கும் பொருட்களைில் ஓட்டை உடைசல் இருக்குமெனில் அவற்றை அடுத்த பெருநாள் வருகின்ற போது தான் மாற்றிக் கொள்ள முடியும்.அது போல் தான் சில மஸ்லிம் பெயர் தாங்கிய கட்சிகள் இருக்கின்றன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பொருத்த வரையில் அவர்களது நோக்கம் யாரை போட்டு தோற்கடிக்கலாம் என்று தான் சிந்திப்பார்கள்.இதை நீங்களும் கடந்த தேர்தல்களின் போது கண்டுள்ளீர்கள்.இதன் மூலம் நீங்கள் அரசியல் முகவரியினை இழந்துவிட்ட துர்ப்பாக்கிய நிலையினை கானுகின்றேன்.
எமது கட்சியினை பொருத்த வரை முழுமையாக சமூகத்தின் பாதுகாப்ப தொடர்பில் கவனம் செலுத்தும் கட்சி என்பதை பகிரங்கமாக இங்கு கூறிக் கொள்ளவிரும்புகின்றேன்.இந்த சமூகத்தின் எதிர்பார்ப்புக்களை அடைந்து கொள்ள அவற்றை பெற்றுக் கொடுக்க எந்த தியாகத்தையும் எமது கட்சியும்,தேசிய தலைமையும் செய்யும் என்பதை கடந்த கால பல்வேறு சம்பவங்களினை முதன்மைப்படுத்தி பாரக்க முடியும்.
நாங்கள் சொல்லப் போவது இது தான் உங்களது பிரதேசத்தில் மக்களின் சமூக உணர்வுகளை பற்றி சிந்திக்க கூடிய எதிர் பார்ப்புக்களை கொண்ட சிறந்த சமூக சேவையாளர் ஒரு வரை உங்கள் பாராளுமன்ற பிரதி நிதியாக ஒருவரை தெரிவு செய்ய வேண்டும்.மாறாக இதனை விடுத்து தேவையற்ற விமர்சனங்கள்,பிரிவுகளின் மூலம் நீங்கள் உங்களது பிரதி நிதித்துவத்தை இல்லாமல் ஆக்கும் கைங்கரியத்தைினை செய்யாதீர்கள்.என்பதை இங்கு கூறியாக வேண்டும்.
எதிர்காலத்தில் இந்த மாவட்ட மக்கள் தமது தேவைகளை எவரின் அடிமையாக நின்று பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையில்லை.அதற்கு மாறாக எம்மில் ஒருவரை தெரிவு செய்து அவரின் மூலம் நாம் எமது இலக்கை அடைந்து கொள்வோம்.இது தான் இன்றைய தேவையாகும்.எனது மாவட்டத்தை சேர்ந்த தாய்மார்களும்,சகோதரிகளும் அதிகமாக எமது பாராளுமன்ற பிரவேசத்துக்கு அறை பிரார்த்தினைகளை செய்பவர்களாக இருக்கின்றார்கள்.அதே போல் பெண்கள் இந்த நாட்டு நடப்பு விவகாரங்கள் பற்றி அறிந்திருக்க வேண்டும்.அப்போது தான் எமது தலைவிதியின் மாற்றத்தை எம்மால் மாற்ற முடியும்.
இந்த மாவட்டத்தில் வாழும் எமது மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த மாவட்டத்துக்கு எமது தலைமையின் தலைமையில் நாம் வந்திருக்கின்றோம்.எமது வருகை உங்களுக்கு புதிய அரசியல் முகவரியினை ஏற்படுத்தி கொடுக்கும் என்ற நம்பிக்கை ஏற்படும் என்றால் மட்டுமே உங்களுடன் நாம் பயணிக்க முடியும் என்றும் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கூறினார்.