Breaking
Sat. Jun 21st, 2025

கொழும்பின் பல பிரதேசங்களில் இந்த ஒழுங்குகள் அமுல்செய்யப்படவுள்ளன.

இதன் மூலம் கொழும்பின் வீதி வாகன நெரிசல் நிலையை குறைக்கமுடியும் என்று பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த திட்டத்தின்படி வாகன சாரதிகள் வீதி ஒழுங்குகோடுகளில் முறையற்ற விதத்தில் குறுக்கிட்டு வாகனங்களை செலுத்துதல் தடுக்கப்படும்.

இவ்வாறானவர்களுக்கு சட்டரீதியாக தண்டனைகள் பெற்றுக்கொடுக்கப்படும்.

மொரட்டுவை முதல் காலிமுகத்திடல், கொள்ளுப்பிட்டி முதல் பம்பலப்பிட்டியின் டுப்ளிகேசன் வீதி, பொரளை, சேனாநாயக்க சந்தி முதல் பொல்துவ சந்தியின் ஸ்ரீஜெயவர்த்தனபுர வீதி, பேலியகொட முதல் கிரிபத்கொட கண்டிவீதி மற்றும் பேலியகொட முதல் நீர்கொழும்பு வத்தளை வீதி என்பவற்றில் இந்த வீதி ஒழுங்குமுறை பின்பற்றப்படவுள்ளது.

Related Post