மக்கள் கருத்து கணிப்பின்றி திருத்தத்திற்குள் உட்படுத்த கூடிய, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் அதிகார குறைப்பே தற்போதைய நோக்கம் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
அதிகார மாற்றமும் மக்கள் சவாலும் என்ற தொனிப்பொருளின் கீழ் கண்டியில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா இதனை தெரிவித்தார். அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்தும் இதன் போது ரில்வின் சில்வா கருத்து தெரிவித்தார்.
-News 1st-