நீர்கொழும்பு மாநகர சபை வேட்பாளர்களை ஆதரித்த கூட்டம்!

-ஊடகப்பிரிவு-

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் கம்பஹா மாவட்டத்தின்,  நீர்கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை  ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்.

நீர்கொழும்பில் நேற்று (25) இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் வர்த்தக சங்கங்கள், பாடசாலை பழைய மாணவர் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள் உட்பட பல்வேறு அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூகம் என்பன காலந்துகொண்டு வேட்பாளர்களுக்கான தமது ஆதரவினை தெரிவித்ததுடன்,  அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனும் கலந்துரையாடினர்.