நீர்கொழும்பு மாநகர சபை வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்!

-ஊடகப்பிரிவு-

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில்  கம்பஹா மாவட்டத்தின், நீர்கொழும்பு மாநகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான கலந்துரையாடல் இன்று (25) நீர்கொழும்பு சோண்டர்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.

முன்னாள் மாநகர சபை உறுப்பினரும், நீர்கொழும்பு மாநகர சபை  முதன்மை வேட்பாளருமான  இஹ்ஷான் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மாகாண சபை உறுப்பினருமான பாயிஸ், கட்சியின் முக்கியஸ்தர் முஹாஜிரீன் மாஸ்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.