கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் நெசவு பயிற்சிகளை நிறைவு செய்து கொண்ட யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று கொழும்பில் இடம் பெற்றது.
கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற நிகழ்வில் 30 மாணவிகள் அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் இருந்து சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர். தாம் பெற்றுக் கொண்ட பயிற்சிகளின் மூலம் கிராமத்தினதும்,நாட்டினதும் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யுமாறு அமைச்சர் பயனாளிகளிடத்தில் வேண்டிக் கொண்டார்.
இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர்,கல்முனை மாநகர சபை உறுப்பிர் எம்.முபீத்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் ஹலீம்,பணிப்பாளர் அலிகான் சரீப் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.