Breaking
Sat. Jun 21st, 2025
நேபாளத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 875 எட்டியுள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை விமானப்படையினரும் இணைந்துள்ளதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
நேபாளத்தில் நிகழந்துள்ள அனர்த்தத்தினைத் தொடர்ந்து, நேபாளத்திற்கான இலங்கைத் தூதுவரினால் அவசர அழைப்பு இலக்கமொன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 009779851020057 குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு மேலதி தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், நேபாளத்திலுள்ள இலங்கை மாணவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post