துருக்கி நாட்டின் விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்று நேபாளத்தின் காத்மண்டுவில் உள்ள விமானநிலையத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
துருக்கியின் ஸ்தான்புல் நகரிலிருந்து வந்த விமானமொன்று ‘திரிபுவன்’ விமானநிலையத்தில் தரையிரங்க முற்பட்ட வேளையில் ஓடுபாதையை விட்டு விலகியுள்ளமையாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது 238 பேர் விமானத்தில் இருந்ததாகவும் அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.