Breaking
Fri. Jun 20th, 2025

நேபாள நாட்டுப் பிரஜை ஒருவருக்கு கண்டி நீதிமன்றம் இன்று 12-03-2015 மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஹெரொயின் போதைப் போருள் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 63 வயதுடைய நபருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் நோபாளம் – லலித்புர பட்டான் பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி குறித்த நபர் தனது உடம்பினுள் சுமார் 80 கிராம் அளவு ஹெரோயின் வைத்திருந்த நிலையில் கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவருக்கெதிராக வழக்கு விசாரணைகள் கண்டி நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தன. இந்தநிலையில் இன்று வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டபோது, கண்டி நீதிமன்ற நீதவான் மனிலால் வைத்தியதிலகவினால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

Related Post