Breaking
Sun. Jun 15th, 2025

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது வீட்டில் வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் 23 வயதான எஸ். எஸ். அமாலி என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஹோமாகமையைச் சேர்ந்த குறித்த மாணவி நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பகிடிவதை காரணமாகவே அவர் தற்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த மாணவி தற்கொலை செய்வதற்கு முன்னர் கடிதமொன்றை எழுதி வைத்துள்ளதுடன் அதில் தனது சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களுக்கு தனது பூதவுடலை பார்வையிடுவதற்கு அனுமதிக்க வேண்டாமெனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனக்கு சொந்தமான நிலக் காணியை அனாதை ஆச்சிரமத்திற்கு எழுதி வைக்குமாறும், இது போன்ற மரணங்கள் எனிமேல் நிகழாமல் இருக்க வேண்டும் எனவும் எழுதி வைத்துள்ளார்.(t)

Related Post