ஸ்ரீலங்கா சுதந்திர இளைஞர் முன்னணியின் புதிய அலுவலகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
கொழும்பு – 10 , டீ.பீ ஜயா மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, தமது கட்சியின் தலைவரைக் கொலை செய்யும் அளவிற்கு அரசியல் வீழ்ச்சியடைந்து சூழ்ச்சி முன்னெடுக்கப்பட்டு பண்டாரநாயக்க கொலை செய்யப்பட்டமையின் பின்னணி கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் எனவும் இதனடிப்படையில் மறுசீரமைப்பை ஆரம்பித்து எதிர்வரும் காலத்தில் ஆட்சியைப் பெற்றுக்கொள்ள ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.