Breaking
Thu. Jun 19th, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு சொந்தமான கொஸ்மோஸ் லங்கா நிறுவனத்துக்குச் சொந்தமான பொருள்களை ஏற்றிச் செல்லும் சரக்கு விமானத்திற்கு பதிவுச் சான்றிதழ் இல்லை என்று கூறப்படுகின்றது.

போயிங் 727 ரக விமானத்தை சஜின்வாஸ் குணவர்தனவுக்கு சொந்தமான நிறுவனம் பயன் படுத்தி வந்துள்ளது. இந்த விமானம் 2000 ஆம் ஆண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தமிழ் வர்த்தகர் ஒருவர் அதனை கொள்வனவு செய்திருந்தார் என்றும் கூறப்படுகின்றது.

ஆரம்பத்தில் இந்த விமானம் ஏரோ லங்கா என்ற பெயரில் இரத்மலானை மற்றும் யாழ்ப்பாணம் இடையில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்தது. இந்த விமானம் இலங்கையில் பதிவு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

விமானத்தின் உரிமையாளர் விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக 2010 ஆம் ஆண்டு குற்றம் சுமத்தப்பட்டதுடன் இடைப்பட்ட காலத்தில் சஜின்வாஸ் குணவர்தன விமானத்தை தனக்கு சொந்தமாக்கி கொண்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த விமான நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தோடு, அதற்காக செலுத்த வேண்டிய கட்டணமும் இதுவரை செலுத்தப்பட வில்லை எனவும் தெரிவிக் கப்படுகிறது.

Related Post