பாகிஸ்தானில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய இந்துக்களின் பாதுகாப்புக்காகவும், அவர்களுக்கு ஆதரவாகவும், முஸ்லீம் மாணவர்கள் மனித சங்கிலி அமைத்த நிகழ்வு பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
கராச்சியில் உள்ள சுவாமி நாராயண் கோவிலில் இந்துக்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். இதன் போது தேசிய மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த முஸ்லீம் மாணவர்கள் மனிதச் சங்கிலி ஏற்பாடு செய்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.
இது குறித்து அக்கூட்டமைப்பின் மூத்த நிர்வாகி பவாத் ஹசன் கூறிய போது “இமாம்பர்காவில் ஷியா பிரிவினருக்கு அரவணைப்பாக நின்று நாங்கள் ஆதரவு காட்டிய போது மருத்துவர் ஜெய்பால் சாப்ரியா எங்களோடு இணைந்து ஒத்துழைப்பு கொடுத்தார். பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நிற்க உறுதி பூண்டுள்ளோம்.
பாகிஸ்தானில் இந்துக் கோவில்கள் அவமரியாதைக்கு உள்ளாக்கப்படுவதும், கட்டாயப்படுத்தி விருப்பத்துக்கு மாறாக பெண்கள் மதமாற்றம் செய்யப்படுவதற்கும், மதக், கலாச்சார சம்பிரதாயங்கள் நசுக்கப்படுவதற்கும் எதிர்த்து துணை நிற்பது நியாயமானதே. நாங்கள் மத அடிப்படை வாதிகள் அல்ல. ஆனால் சமூகம் மாறவேண்டும். அந்த மாற்றத்தில் நாமும் அங்கம் வகிக்க வேண்டும்” எனக் கூறினர்.