இலங்கை பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான நட்புறவு கொண்டாட்ட நிகழ்வு எதிர்வரும் 21 ஆம் திகதி கொழும்பு கிராண்ட் ஒரியன்ட் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
இலங்கை – பாகிஸ்தான் நட்புறவு (SLPAFA) கழகம் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் இலங்கை பாகிஸ்தான் சமூகத்தினைச்சார்ந்த பல மக்கள் கலந்து கொள்ளவுள்ளதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பங்குபற்றுனர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கிடையில் கேள்விகள் தொடுக்கப்பட்டு போட்டி நிகழ்வும் இடம்பெறவுள்ளது. கேட்கப்படும் கேள்விகள் இலங்கை பாகிஸ்தான் தொடர்பான பொது அறிவு வினாக்களும், உலக நடப்புக்களும், விஞ்ஞான தொழில்நுட்ப விடயங்கள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளையும் உள்ளடக்கியிருக்கும்.
போட்டியின் முடிவில் நல்ல மதிப்பெண்களைப் பெறும் முதல் மூன்று அணிகளுக்கும் பரிசில்கள் வழங்கப்படும் . இரு நாடுகளுக்கிடையிலுமான நட்புறவு மிகவும் பழமை வாய்ந்ததொன்றாகும். 1950 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்விற்கு தற்போது சுமார் 64 வருட பழமையும் அநுபவமும் வாய்ந்ததாகும்.
BPK