Breaking
Sat. Jun 21st, 2025

பாடசாலை மாணவர்களுக்கு ஒருவேளை உணவு வழங்குவது தொடர்பில் அமைச்சரவை உப குழுவை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியின் தலைமையில் நேற்று மாலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

நிதி அமைச்சின் செயலாளர் தலைமையில் இந்த அமைச்சரவை உப குழு நியமிக்கப்படவுள்ளது.

ஒருவேளை உணவை வழங்குவதன் ஊடாக பிள்ளைகளின், குறை போஷாக்கு, விற்றமின் குறைபாடுகள் ஆகியவற்றுக்கு தீர்வு கிடைக்கும் எனவும், சுகாதாரமான பலம்வாய்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Post