பாணந்துறை தெற்கு பகுதி வீடொன்றில் இருந்து உயிரிழந்த இரண்டு சகோதரிகளுடையது என சந்தேகிக்கப்படும் மண்டையோடுகளும் மனித எலும்புக்கூடுகளும் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வயோதிபப் பெண்களான இருவரும் சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சுமார் இரண்டு வருடங்களுக்கு பின்னர் குறித்த தமது சகோதரிகள் வாழ்ந்த வீட்டுக்கு வந்து பார்த்த போது சகோதரிகளின் மண்டையோடுகளும் மனித எலும்புக்கூடுகளும் காணப்பட்டதாக பெண்களின் சகோதரர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தநிலையில் மரண விசாரணை இடம்பெறும் வரை சம்பவ இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் பாணந்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.