பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம் இந்த அழைப்பாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டமைக்கு எதிராக அத்தநாயக்க மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு எதிர்வரும் 19ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.