வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி யாருடைய நிர்வாகத்தின் கீழும் கட்டுப்பட்டவர் அல்ல.என்று வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.
வடமாகாண ஆளுநர் செயலகத்தினால் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரதம செயலாளர்ஆளுநரை பின்பற்றுபவரா அல்லது முதலமைச்சரை பின்பற்றுபவரா? என்று ஆளுநரிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் பிரதம செயலாளர் யாருடைய நிர்வாகத்தின் கீழும் கட்டுப்பட்டவர் அல்ல.அவருக்கு மாகாணத்துக்குரிய நிதிப் பொறுப்பே வழங்கப்பட்டுள்ளது.நிதியமைச்சின் செயலாளரின் அதிகாரமே பிரதம செயலாளருக்கும் வழங்கப்பட்டுள்ளது.எனவே அவர் யாருக்கும் கட்டுப்பட்டு செயற்படத் தேவையில்லை என அவர் தெரிவித்தார்.