Breaking
Tue. Apr 29th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் (முன்னைய அரசாங்கத்தின்) பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, புத்தளம் – 05ஆம் வட்டார அமைப்பாளர் எம்.எம்.எம்.முர்ஷித்தின் வேண்டுகோளின் பேரில், புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரிக்கு, 430,000 ரூபாய் பெறுமதியில், Smart Class வகுப்பறைகளுக்கான தளபாடங்கள் திங்கட்கிழமை (09) கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் புத்தளத்தில் போட்டியிட்ட வேட்பாளர் எம்.எச்.முஹம்மத், 07ஆம் வட்டார அமைப்பாளர் ரஸீன் ஆசிரியர், இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் முகாமைத்துவ சபைத் தலைவர் அஜ்மல், செயலாளர் பொரியியலாளர் மரைக்கார், பொருளாளர் சட்டத்தரணி பாரிஸ், நிர்வாக சபை உறுப்பினர் ஹாபி உட்பட நிர்வாக உறுப்பினர்களும் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

Related Post