அம்பலாங்கொடை பட்டபொல பிரதேசத்தைச் சேர்ந்த குலரத்ன ஆகாஸ் என்ற ஐந்து வயது செவிப்புலனற்ற சிறுவனின் காதில் பொருத்தப்பட்டிருந்த பெறுமதிமிக்க செவிப்புலனை அறியும் கருவி கடந்த 5ம் திகதி கொழும்பு கடற்கடை பிரதேசத்தில் வைத்து களவாடப்பட்டது.
இது குறித்த செய்தியை ஐ.ரி.என், வசந்தம் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது.
இதை பார்த்த முன்னாள் ஐ.ரி.என்.பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமர் சுமார் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பெறுமதியான இக்கருவியை அச்சிறுவனுக்கு பெற்றுக்கொடுக்க முன்வந்ததுடன் நேற்று (11) ஐ.ரி.என்.தொலைக்காட்சி நிறுவனத்தில் வைத்து வழங்கினார்.
இந்நிகழ்வில் ஐ.ரி.என் தொலைக்காட்சி சேவையின் தலைவர் போராசிரியர் தம்மிக்க கங்கனாத் திஸாநாயக்க, செயற்பாட்டுப் பணிப்பாளர் தனுஷ்க ராமநாயக்க, பணிப்பாளர் நாயகம் (செய்தி) லால் ஹேமந்த மாவலகே, பொது முகாமையாளர் அருன மூர்த்தி விஜயசிங்க, நிறுவன உத்தியோகத்தர்கள் மற்றும் குழந்தையின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
(படம்-ஏ.எஸ்.எம்.ஜாவித்)
இது தொடர்பில் எம் சகோதர சேவை பன்னவா sms அவர்களின் செய்தி விளக்கம்
புரவலர் ஹாசீம் உமர் அவர்கள் செவிப்புலன் அற்றிருந்த சிங்கள பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு செவிப்புலன் சக்தியை மீண்டும் பெறுவதற்கான வைத்திய சேவைகளுக்கு நிதி உதவி செய்திருக்கிறார்!
இந்த செய்தியை இன்று ITN சிங்கள செய்தியில் மிகவும் உணர்வு பூர்வமாக சொல்லியிருந்தார்கள்!
ஹாசீம் உமர் ஒரு முஸ்லிம் இனத்தை சேர்ந்தவர்! குறித்த சிறுவன் பௌத்த மதத்தை சேர்ந்தவர்! இன ஒற்றுமைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று குறித்த செய்தியின் இறுதியில் தொட்டுக்காட்டப்பட்டது!
இன ஒற்றுமையை வலுப்படுத்த ஊடகங்கள் முக்கிய பங்கை வகிக்க வேண்டும்!
ITN தொலைக்காட்சி சேவை இப்போது புதுப்பரிமானம் பெற்று அந்தப்பணியை ஆற்றிக்கொண்டிருக்கின்றது!
சுவாதீன ரூபவாகினியின் (ITN) இத்தகைய சேவைகள் மேலும் தொடர மனமார வாழ்த்துகிறேன்!