Breaking
Sun. Jun 15th, 2025

முகம்மட் பஹாத்

ஒரு சமூகம் குறித்து மிக மோஷமான வாசகங்களைப் பயன்படுத்துவது
தவிர்க்கப்படல் வேண்டும். பொதுபல சேனா இன்று முஸ்லிம்களைக் குறிக்க
பயன்படுத்தியுள்ள வாசகங்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன் எமது தெரிவித்தார்.

இன்று பொதுபல சேனா நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் முஸ்லிம்களை குறிப்பதற்கு கீழ்த்தரமான சொற் பிரயோகத்தை அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பன்றி என்பது முஸ்லிம்களுக்கு தடுக்கப்பட்ட ஒரு விலங்காகும். அத்துடன், இழிவான ஒரு
விலங்காகவும் உள்ளது. இந்த சொற்பிரயோகத்தை முஸ்லிம்களில் ஒரு குழுவைக் குறிக்க குறித்த அமைப்பின் தேரர் பயன்படுத்தியுள்ளார்.

பௌத்த மதம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இன்னொரு மதத்தை அகௌரவப்படுத்துவதில்லை.

இவ்வாறிருக்கையில் அம்மதத்தின் புனித ஆடையான காவியுடையை அணிந்து கொண்டு,
கௌரவமான அமைப்பாக தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் இந்த பொதுபல சேனா அமைப்பு, இவ்வாறு கீழ்த்தரமான சொற்பிரயோகங்களை
பயன்படுத்துவது இந்நாட்டு முஸ்லிம்களை வேதனைகொள்ளச்
செய்துள்ளது.

முஸ்லிம் சமூகத்தை நோவினை செய்யும் வகையில் இது போன்ற வார்த்தைப்
பிரயோகங்களை தேசிய ஊடகங்களின் முன்னாள் பகிரங்கமாகப்
பயன்படுத்தியமைக்காக, அவ்வமைப்பு முஸ்லிம் சமூகத்திடம் பகிரங்க
மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர்
மேலும் குறிப்பிட்டார்.

Related Post