பொதுபல சேனாவின் நடவடிக்கைகளால்தான் சர்வதேசத்தின் ஆதரவை இழந்தோம் என்பது மட்டுமல்ல பொதுபல சேனாவின் நடவடிக்கைகள் காரணமாகவே மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியும் கவிழ்ந்தது என ஆர். யோகராஜன் எம்.பி. நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபைச்சட்டத்தின் ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரேரணை விவாதத்தில் உரையாற்றும் போதே ஆர். யோகராஜான் எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ஐ.நா.வில் இலங்கைக்கு ஆதரவு வழங்க உறுதியளித்து இறுதி நேரத்தில் பல நாடுகள் அதனை வாபஸ் வாங்கியது இதற்கு பொது பல சேனாவின் நடவடிக்கைகளே காரணம் என்று உண்மையை ஏற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர் டியூ. குணசேகரவை பாராட்டுகிறேன்.
சர்வதேச நாடுகளின் ஆதரவை மட்டுமல்ல, முன்னாள் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி கவிழவும் பொதுபல சேனாவே காரணமாக அமைந்தது.
இலங்கை பெளத்தர்களின் ஆதரவுடன் மட்டும் வெற்றி பெறலாம் என்று எண்ணியிருந்தார்.ஆனால் சிறுபான்மை மக்களின் பெரும் ஆதரவுடன் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார்.
அதேவேளை ஊழல் மோசடிகள் காரணமாக சிங்கள மக்களும் மகிந்தவை தோல்வியடையச் செய்தனர். 19 ஆவது திருத்தச் சட்டம் வரவேற்புக்குறியதாகும். இதன் மூலம் ஆட்சி மாற்றல் தடுக்கப்பட்டுள்ளது.
இது மக்களின் வாக்குறிமையை பாதுகாக்கும் நடவடிக்கையாகும் என்றார்.