Breaking
Sun. Jun 15th, 2025

அஸ்ரப் ஏ சமத்

கடந்த கால அரசாங்கம் திட்டமிட்டே பள்ளிவாசல்களை பதிவு செய்வதை நிறுத்திவைத்திருந்தது. தற்பொழுது இந்த புதிய அரசாங்கமே முஸ்லீம்களுக்கென தனியானதொரு கபினட் அமைச்சரை நியமித்தள்ளது. இதனால் முஸ்லீம்களது மத சம்பந்தமான பிரச்சினைகள் தீர்வுபெற்றுக்கொடுக்கப்படும். அமைச்சர் ஹலீம்

மேற்கண்டவாறு நேற்று நவமணி பத்திரிகை கடந்த வாரம் அல் சபாப்புடன் இணைந்து நடாத்திய ரமழான் முபாறக் கேள்வி பதில் பரிசு பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு மருதானை அல் ஷபாப் தலைமையகத்தில் நவமணி ஆசிரியர் என்.எம் அமீன் மற்றும் அல்ஷபாப் தலைவர் மௌலவி தாசீம் ஆகியேர்களது தலைமையில் நடைபெற்றது.
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு அமைச்சர் ஹலீம் உரையாற்றினார்.

கடந்த காலத்தில் வக்பு சபை திரம்பட நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனது அனுமதியுடன் புதிய வக்பு சபை நியமித்துள்ளேன் அவர்கள் அடுத்த வாரத்தில் இருந்து தமது வேலைகளை ஆரம்பிப்ப்பார்கள். இம்முறை காதி நீதிமன்றமும் முஸ்லீம் சமய அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்கான சட்ட வரைபுகள் மற்றும் சட்ட திட்டங்கள் முன்னெடுக்கப்படும். அதற்கான சட்டதிட்டமொன்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவினால் எனக்கு தரப்பட்டுள்ளது.

ஆகவே ஹஜ் விடயத்திலும் கடந்த முறை போன்று இம்முறை எவ்வித பிரச்சினைகளும் வராமல் பார்த்துக் கொள்வதாகவும் முஸ்லீம் சமய தபால் அமைச்சர் ஹலீம் கூறினார். அதே போன்று முகத்தீன்களது பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு பெறப்படும்.

இந் நிகழ்வில் முஸ்லீம்களுக்கு தனியானதொரு ஊடகம் மற்றும் நாளிதழ் முஸ்லீம்களது பிரச்சினைகள் பற்றி பிரசுரிக்க முஸ்லீம்களுக்கென ஒரு பத்திரிகை இல்லாது இருந்த இடைவெளியை இந்தப் பத்திரிகை நிவர்த்தி செய்துவருகின்றது. அவ்வப்போது விடுதலைப்புலிகளது காலத்தில் முஸ்லீம்களுக்கு இழைத்த அநீதிகளை ஹஜ் பிரச்சினை, பாடாசலை, பள்ளிவாசல், பொதுபலசேனா போன்ற பிரச்சினைகளை அவ்வப்போது கடந்த 19 வருடங்களாக வெளிக்கெணர்கின்றது இந்தப் பத்திரிகை எனவும் அவர் தெரிவித்தார்.

Related Post