Breaking
Wed. Jun 18th, 2025

இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான பல­மான உறவை மேலும் வலுப்­ப­டுத்தும் நோக்கில் எனது இலங்கை விஜயம் அமையும் என்று நம்­பு­கிறேன் என இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்ளார்.

இலங்கை விஜயம் குறித்து இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி டுவிட்டர் தளத்தில் மேற்­கொண்­டுள்ள பதி­வி­லேயே இதனை தெரி­வித்­துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பில் ஆர்வம் காட்டி வரு­வ­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார்.

“”எனது இலங்கை விஜயம் இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான நட்­பு­ற­வினை மேலும் வலுப்­ப­டுத்­தக்­கூ­டிய வகையில் அமையும். நான் இலங்கை பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­ற­வுள்­ள­துடன் மஹா­போதி பகு­திக்கும் யாழ்ப்­பா­ணத்­துக்கும் விஜயம் செய்­ய­வுள்ளேன். மிகவும் மகிழ்ச்­சி­யு­டனும் நம்­பிக்­கை­யு­டனும் நான் இலங்கைக்கு விஜயம் செய்­கின்றேன் ”  என்று இந்­திய பிர­தமர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவு செய்­துள்ளார்.

எதிர்­வரும் 13ஆம் திகதி மோடி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜய த்தை மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post