Breaking
Sun. Jun 15th, 2025

அரசாங்கம் கொண்டுவரவுள்ள தேர்தல் திருத்தம் தொடர்பில் உடனடியாக ஆதரவு வழங்குவது தொடர்பில் எமது கட்சி ஆழமாக ஆராய்ந்துவருவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் 100 நாட்களுக்குள் இதனை நடை முறைப்படுத்த அளுத்தம் கொடுக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்பதை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தெளிவாக கூறியுள்ளதாகவும் கூறினார்.

.

அரசாங்கத்தில் அங்கத்துவம் கொண்டுள்ள சிறுபான்மை கட்சிகள் இந்த  துரித தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் முழுமையான ஆதரவை வழங்கியுள்ளதாக வெளியான செய்தி தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த தகவலை வெளியிட்டார்.

சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி செயற்பட்டதால் அவரது பதவி அகற்றப்பட்டார்.தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு 30 சதவீதமான சிறுபான்மை மக்கள் வாக்களித்தனர் என்பதை சுட்டிக்காட்டவிரும்புவதாக தெரிவித்துள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன்,சிறுபான்மை மக்களது பிரதி நிதித்துவம் பறிக்கப்படும் எந்தவொரு தேர்தல் முறை மாற்றத்துக்கும் தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.

அரசாங்கம் முன்வைத்துள்ள 19 வது திருத்த சட்ட மூலத்திற்கு தமது கட்சி ஆதரவு வழங்கும் என்று தெரிவித்த கட்சியின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன்,மக்களின் அங்கீகாரமற்ற எந்த தீர்வினையும் பலவந்தமாக தினிப்பதை தமது கட்சி ஆதரிக்கப் போவதில்லை என்பதையும் தெரிவித்தார்

Related Post