ஊடகப் பிரிவு
எந்தக்கட்சியாக இருந்தாலும் அவை மக்களுக்காக பணியாற்றவில்லை என்றால் அதன் பின்னால் மக்கள் அணிதிரளமாட்டார்கள் என சுட்டிக்காட்டியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஏனைய கட்சிகளுடன் வ ஒப்பீட்டு பார்க்கும் போது எமது கட்சிக்கு மக்கள் வழங்கிய அரசியல் பலத்தினால் ஆற்றியுள்ள பணிகளை நீங்கள் எடை போட்டு பார்க்கலாம் என மக்களிடத்தில் எடுத்துரைத்தார்.
வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளம் பிரதேச சபைக்குட்பட்ட வாழவைத்த குளம் பஸ் தரிப்பு நிலையம்,மற்றும் பொது விளையாட்டு மைதானம் என்பவைகளை திறந்து வைத்ததன் பின்னர் இடம் பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இன்று இந்த சேவையினை மக்கள் பெறுகின்றனர்.மக்கள் எதிர் பார்ப்பது இதனை தான் .ஆனால் இன்று பலர் அபிவிருத்திகளை மறந்து பேசுகின்றனர்.கடந்த ஆட்சி காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட பலசேனா அமைப்பினை கட்டுப்படுத்த அரசு தவறியது.அதனால் என்ன நடந்தது,சில நாட்களுக்கு பின்னர் மீண்டு;ம் பலசேனா தலை தூக்க ஆரம்பித்துள்ளது.இது மக்களுக்கு ஆபத்தாகும்,இதனை கட்டப்படுத்த சட்டத் துறைசார்ந்தவர்களுடன் கலந்து ஆலோசித்து வருகின்றோம்.
நாம் இனவாதம் பேசுபவர்கள் அல்ல இனவாதம்,பிரதேச வாதம்,பிரிவினை என்பவைகளை நாம் பின்பற்றுகின்ற இஸ்லாமிய மார்க்கம் வெறுக்கின்றது.அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டே எமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோம்.எமது காலத்தில் நாம் சகல சமூகத்தின் எதிர்பாரப்புக்களையும் ,முடியுமானவரை நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம்.
எதிர்காலத்தில் இந்த வாழவைத்த குளம் உள்ளிட்ட பிரதேசம் சிறந்ததொரு நகராக மாறிவிடும்.அதன் மூலம் எமது மக்கள் பொருளாதார ரீதியில் நன்மைகளையும் அடைந்து கொள்வார்கள்.மக்கள் வழங்கிய வாக்குகள் அரசியல் பலமாக இருக்கின்றது.அதனைக் கொண்டுதான் இந்த பணிகள் இடம் பெறுகின்றது என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.
இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ஜயதிலக,செட்டிக்குளம் பிரதேச சபை தலைவர்,பிரதேச சபை உறுப்பினர் சரூக்,பரந்தன் இராசாயன கூட்டுத்தமாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மொஹிதீன்,அமைச்சரின் வவுனியா மாவட்ட இணைப்பு செயலாளர் முத்து முஹம்மத்,செட்டிக் குளம் பிரதேச செயலாளர் கமலேஸ்வரன்,வவுனியா நகர சபை முன்னாள் உறுப்பினர் ஆரிப் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.