மக்கள் காங்கிரஸ் வேற்பாளரை ஆதரிக்கும் புதுவெளி வட்டார மக்கள்!

ஏ.எம்.ரிஸாத்

நடைபெறவிருக்கும் முசலி பிரதேச சபை தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பாக, புதுவெளி வட்டாரத்தில் போட்டியிடும் அப்துர் ரஹ்மான் மெளலவியை ஆதரித்து, கரம்பை கிராமத்தில் வசிக்கும், புதுவெளி கிராம மக்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கல்விமான்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  மூலம் எமது கிராமத்துக்கு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் செய்து தரப்பட்டு இருக்கிறது. அதேபோல் வேலைவாய்ப்புகள் இன்னும் பல விடயங்களை செய்து தந்த தலைமையை பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும். ஆகவே, இந்த தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து வெற்றியடைய செய்யவேண்டியது எமது மக்களின் பொறுப்பாகும் என்றும் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.