மலேசியாவில் தொழில் வாய்ப்புப் பெற்றுச் சென்ற ஐந்து இலங்கையர்கள், குண்டர் குழுக் கூட்டங்களல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அவ் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ராகல மஹதுடுவ என்னும் இடத்தைச் சேர்ந்த எம்.விஜயசிறி என்பவரே இவ்வாறு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனைவி மற்றும் தாய்க்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியுள்ளார்.
ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் ஊடாக ஒராண்டுக்கு முன்னதாக விஜயசிறி மலேசியாவிற்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளார்.
ஹொட்டல் ஒன்றில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகவும் 75000 ரூபா சம்பளம் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினம், ஒப்புக் கொண்ட சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் 16 மணித்தியாலயம் வேலை செய்ய நேரிட்டுள்ளதாகவும் விஜயசிறி மனைவியிடம் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக ஹோட்டலில் வேலை செய்ய முடியாத காரணத்தினால், தப்பிச் சென்று வேறு இடத்தில் பணியாற்ற முயற்சித்த போது ஹொட்டலின் உரிமையாளரும் குண்டர்களும் தம்மை தாக்கி ஒர் அறையில் அடைத்து வைத்து தாக்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
விஜயசிறி என்பவர் நெருக்கடிகளை எதிர்நோக்கியதாக அருகாமையில் பணியாற்றிய மற்றுமொரு இலங்கையர் குறித்த சிங்கள ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளது.
மலேசியாவில் உள்ள ஹொட்டல்களில் கடமையாற்றி வரும் இலங்கையர்கள் பலர் இவ்வாறு துன்பங்களை எதிர்நோக்கி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.