Breaking
Fri. Jun 20th, 2025
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைக்கவேண்டாம் என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவைக்கு நடுவே அமர்ந்திருந்தே அவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பில் இன்றே எமக்கு தீர்மானம் வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கைவிடுத்தனர். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு கடமைகள் சம்பந்தமாகவே அழைக்கப்பட்டுள்ளார். அது பிரச்சினையாக இருந்தால் அதற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதியின் சட்டத்தரணிக்கு நீதிமன்றத்துக்கு செல்லமுடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

Related Post