Breaking
Sun. Oct 13th, 2024

கிழக்கில் வலு­வான முஸ்லிம் சக்தி உரு­வெ­டுத்து வரு­வ­தாக தெரி­வித்த முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம். அஸ்வர், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை கிழக்கு மாகா­ணத்­திற்கு அழைத்­து­ வ­ரு­மாறு தினமும் தொலைபேசி அழைப்­புகள் வரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

கொழும்பில் சிறு வியா­பா­ரி­களின் வர்த்­தக நிலை­யங்­களை அகற்றும் திட்­டத்தை உட­ன­டி­யாக கைவிட வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

பொர­ளையில் அமைந்­துள்ள என்.எம்.பெரேரா நிலை­யத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற கூட்டு எதிர்க்கட்­சியின் ஊடக சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம். அஸ்வர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இவர் இங்கு தொடர்ந்தும் கூறு­கையில், எஸ்.டப்­ளியூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்க காலத்தில் இருந்து முஸ்லிம் தலை­மைத்­து­வங்கள் நாட்டின் முன்­னேற்­றத்­திற்­காக ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யுடன் ஒன்­றி­ணைந்து செயற்­பட்­டன.

ஆனால் தற்­போது ஆட்சி பீடம் ஏறி­யுள்ள அர­சாங்கம் கொழும்பில் உள்ள வியா­பா­ரி­களின் வர்த்­தக நிலை­யங்­களை உடைப்­ப­தற்கு திட்­ட­மிட்­டுள்­ளது. பிர­தமர் இந்த திட்­டத்தை கைவிட வேண்டும் . முஸ்லிம் மக்­களின் வாக்­கு­களை மறந்து விடக்கூடாது. மேலும் 600 ஏக்கர் காணியை சர்­வ­தே­சத்­திற்கு கொடுப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களும் இடம்­பெ­று­கின்­றன.

எவ்­வா­றா­யினும் தற்­போது கிழக்கில் வலு­வான புதிய முஸ்லிம் சக்தி உரு­வெ­டுத்து வரு­கின்­றது.

அவர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை அழைத்து வருமாறு தினமும் கோருகின்றனர் என்றார்.

By

Related Post