Breaking
Sun. Jun 15th, 2025

உலகக் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெற்ற காலிறுதிப் போட்டியுடன் இலங்கை அணியின் நட்சத்திர வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றனர்.

ஓய்வு பெற்ற இருவருக்கும் கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவான்கள் உட்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.  இதில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திரம் சச்சின் டென்டுல்க்கரும் தனது வாழ்த்தினை இருவருக்கும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சச்சின் தெரிவித்த வா​ழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, “பல வருடங்களாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, மற்றும் பல சுற்றுப் போட்டிகளில் ஒரு தனிச்சிறப்பு பாகங்களாக விளங்கிய புகழ்பெற்ற வீரர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இனி வரும்காலங்களில் நீங்கள் இருவரும் இல்லாத அணியை கற்பனை செய்யவே மிகவும் கடினமாகவுள்ளது. எனினும்உங்கள் இருவருடைய எதிர்கால வாழ்க்கை பிரகாசிக்க எனது வாழ்த்துக்கள். உங்கள் இருவரதும் பிரிவு எங்களை மிகவும் வருத்துகின்றது” என சச்சின் தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

404 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய சங்கக்காரா 14,234 ஓட்டங்களைப் பெற்று தனது ஓட்ட சராசரியாக 41.98 இனை கொண்டுள்ளார். மஹேல 448 போட்டிகளில் பங்குபற்றி 12,650 போட்டி தனது ஓட்ட சராசரியாக 33.37 பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post